கொழும்பில் உள்ள முக்கிய அடையாளமான இலங்கையின் தாமரை கோபுரம் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டதில் இருந்து இதுவரை அரை மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் தென் மாகாணத்தில் உள்ள மாத்தறையில் இருந்து வந்த ஒருவருக்கு 500,000 வது டிக்கெட் விற்கப்பட்டதாகவும், அவருக்குப் பலகை மற்றும் பரிசு வவுச்சர் பரிசாக வழங்கப்பட்டதாகவும் லோட்டஸ் டவர் நிர்வாகத்தின் தலைவர் பிரசாத் சமரசிங்க செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கோபுரம் பொதுமக்களுக்கு திறந்து வைக்கப்பட்டதில் இருந்து 268 மில்லியன் ரூபாவுக்கும் (730,000 அமெரிக்க டொலர்கள்) வருமானம் கிடைத்துள்ளதாக சமரசிங்க தெரிவித்தார்.
இலங்கையும் சீனாவும் 2012 ஆம் ஆண்டு தெற்காசியாவில் மிக உயரமான கோபுரத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன, சீன நிறுவனம் ஒன்று இதன் பொது ஒப்பந்ததாரராக உள்ளது.
தாமரை கோபுரம் செப்டம்பர் 2022 இல் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது.
N.S