துருக்கியில் பெண்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து போராட்டம்
துருக்கியில் பெண்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
அங்காரா, இஸ்மிர் ஆகிய நகரங்களில் நூற்றுக்கணக்கான பெண்கள் ஒன்றுதிரண்டனர். இதன்போது ஜனாதிபதிக்கு எதிராக கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
துருக்கியிலுள்ள பல்கலைக்கழக வளாகங்களில் அண்மைக்காலமாக நாள்தோறும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கச் சட்டங்கள் கடுமையாக்கப்படும் என்று ஜனாதிபதி ரிசப் தையிப் எர்டோகான் (சுநஉநி வுயலலip நுசனழபயn) உறுதியளித்தார்.
பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கவும் அத்தகைய குற்றங்களைத் தீர விசாரித்துச் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தண்டனை விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.