தூய்மையான பாராளுமன்றத்தை உருவாக்கும் முயற்சிக்கு ஜனாதிபதி அழைப்பு
மோசடியாளர்கள், ஊழல்வாதிகள் இல்லாத தூய்மையான பாராளுமன்றத்தை உருவாக்கும் முயற்சியில் அனைத்து மக்களும் இணைய வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அழைப்பு விடுத்திருக்கிறார்.
எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் ஊடாக மக்கள் இந்த முயற்சிக்கு பலம்; சேர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
கட்டுநாயக்கவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி பேரணியில் கலந்துகொண்டு ஜனாதிபதி உரையாற்றினார்.
பொதுச் சேவைகள் தொடர்பில், பொதுமக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். பொதுப்பணித் துறையை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் இதனை இலகுபடுத்த முடியும்.
அதனை இலக்காகக் கொண்டு, அரசாங்கம் பாரிய திட்டத்தை வகுத்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த பேரணியில் கலந்து கொண்ட, அமைச்சர் விஜித ஹேரத், கடந்த 25 நாட்களில் அரசாங்கம் செய்த மாற்றங்களினால் எதிரணியினரும் தமது கோசங்களை இழந்துள்ளனர். மக்களின் இந்த வெற்றி மேலும் வலுப்பெற வேண்டும். அதற்கு பாராளுமன்றத்தின் பெரும்பான்மை அவசியம் என கூறினார்.