தென்கொரியா தொடர்பில் வடகொரியாவின் அரசியல் யாப்பில் திருத்தம்.
தென்கொரியாவை பகையாளி தேசம் என்று வரையறுக்கும் விதத்தில், வடகொரியாவின் அரசியல் யாப்பு திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் வடகொரிய பாராளுமன்றம் கூடி, அரசியல் யாப்பின் மீதான திருத்தம் பற்றி விவாதித்தது.
இதன்போது, தென்கொரியாவை பிரதான பகையாளி நாடென நிர்ணயிக்குமாறு ஜனாதிபதி கிம் ஜொன் உங் மக்களவை உறுப்பினர்களை கேட்டுக் கொண்டாரெனத் தெரிகிறது.
தென் கொரியாவுக்கான ரயில் பாதையை தகர்த்து, இரு நாட்களுக்குள் இந்த அறிவித்தல் வெளியாவது குறிப்பிடத்தக்கது.