தென் கொரிய ட்ரோன்கள் தொடர்பில் வடகொரியா அதிருப்தி
தென் கொரியாவுக்கு சொந்தமான ட்ரோன் விமானங்கள் வடகொரியாவின் நிர்வாக பகுதிக்குள் நுழைந்தமை தொடர்பில் வடகொரியா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
இத்தகைய செயற்பாட்டுக்கு பதிலடி ஒன்றை தமது நாடு விரைவில் வழங்கும் என்று வடகொரிய தலைவர் கிம் யொங் உன்னின் சகோதரி தெரிவித்துள்ளார்.
சர்வதேச சட்ட விதிமுறைகளை தென் கொரியா மீறியுள்ளது என்று வடகொரியா சாடியுள்ளது.