தென் மேற்கு பிராந்தியத்தில் அடைமழையுடன் கூடிய காலநிலை
மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நாட்டின் ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம், ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் ஹொரண, வலல்லாவிட்ட ஆகிய இடங்களுக்கு முதலாம் நிலையிலான எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
காலி மாவட்டத்தில் நாகொட, எல்பிற்றிய ஃ மாத்தறை மாவட்டத்தில் அக்குரஸ்ஸஃ பதுளை மாவட்டத்தில் எல்ல, ஹாலிஎல, பசறை / களுத்துறை மாவட்டத்தில் மத்துகம, தொடங்கொட, இங்கிரிய, புலத்சிங்கள / கேகாலை மாவட்டத்தில் யட்டியாந்தொட்ட / நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இங்கு திடீர் நீர் ஊற்றுகளும், சுவர்களில் வெடிப்புக்களும் உருவாகும் பட்சத்தில் பிரதேசவாசிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் கோரியுள்ளது.