உள்ளூராட்சித் தேர்தல் தெற்கில் மீண்டும் ஒரு மாற்றத்தை காட்டும் அதேநேரம் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தமிழ் அரசை உறுதிப்படுத்த வேண்டும. என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட உள்ளூராட்சி சபை வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்று இளங்கலைஞர் மண்டபத்தில் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றது. இதில் உரையாற்றும்போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் விபரம் தெரிவிக்கையில்,
நாடு வங்குறோத்து நிலை மேலும் வலு வடைந்தால் ஜனாதிபதித் தேர்தல் காலத்திலும் அத்தியாவசிய தேவைக்குத்தான் பணம் வழங்குமாறு திறைசேரிக்கு கடிதம் அனுப்ப முடியுமா என கேள்வி எழுப்பப்படுகின்றது. அதனால் மார்ச் 9ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தலும் நடக்கும்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பது தேசிய மட்டத்தில் முக்கிய விடயமாக உருவெடுத்துள்ளது. நாட்டை விட்டு ஓடிய ஜனாதிபதி சத்தம் சத்தடி இன்று திரும்பி வந்துள்ளார். ஏனெனில் ஒரு நாடும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நாட்டில் இரு தடவை இராணு ஆட்சிக்கு முயன்றும் இரு தடவை ஆயுத கிளர்ச்சிக்கு முயன்றும் முடியாத ஒரு விடயத்தை அகிம்சை வழியில் மாற்றியபோது பதவி விலகல் கடிதத்தைக்கூட எழுதி வழங்க முடியாது தப்பியோடிய வரலாறு உண்டு. தமிழ் அரசுக் கட்சி ஈழத்துக் காந்தியினால் ஆரம்பிக்கப்பட்ட கட்சிக்கும் அகிம்சை வரலாறு உண்டு. நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கைது செய்தபோது அவர் எதிரான கட்சி என வாய் மூடி இருக்க முடியாது. அதற்கு வன்மையான கண்டனத்தை பதிவு செய்துள்ளோம்.
தனியாக போட்டியிடுவது என கட்சிகளிடையே பேசாமல் எடுத்த முடிவு அல்ல ரெலோவின் கட்சித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆம் அவ்வாறு பேசினோம் என வீரகேசரிப் பத்திரிகைக்குத் தெரிவித்த விடயம் அந்தப் பத்திரிகையில் செய்தியாக வெளிவந்தது. அதேபோல் செல்வம் அடைக்கலநாதன் மன்னாரில் வைத்து இன்னும் ஒன்றையும் பேசினார் நாம் அவர்களை தாக்கியும் பேசமாட்டோம் என்றார். அதனையும் மீறிவிட்டனர் அதனால் நானும் ஒரு தடவை வாய் திறக்க வேண்டி ஏற்பட்டது.
இப்பவும் சொல்கின்றோம் கண்ணாடி வீட்டில் இருப்பவர்கள் சிந்திக்க வேண்டும். ஏனெனில் நாம் இன்னும் 10 வீதம்கூட கூறவில்லை முழுமையாக கூறினால் தாங்க முடியாது.
தெற்கிலே மீண்டும் ஒரு பாரிய மாற்றம் ஏற்படும் வாய்ப்பு இருக்கின்றது. அப்போது வடக்கு கிழக்கு மக்கள் வழங்கிய ஆணையில் மாற்றம் இல்லை என்ற செய்தியாக இருக்க வேண்டும் அத்தனை முக்கியமாக இந்த உள்ளூர் தேர்தலும் பார்க்கப்படுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்த கட்சியாக இல்லாதபோது அரச தரப்பினால் பதிவு செய்யப்பட்ட கட்சியின் சின்னமே குத்துவிளக்கு உள்ளது. அந்த சின்னம் இன்று கூட்டமைப்பின் பெயரிற்கு பயன்படுத்தப்படுகின்றது என்றார்.
TL