தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் 26ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.
நாட்டின் ஆட்சி அதிகாரத்திற்கு எந்தக் குழுவிற்கு வழங்குவது என்பதை மக்கள் தீர்மானிக்கும் தேர்தலின் விளிம்பில் உள்ளனர் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தாம் 1988ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ஜே.வி.பியின் அரசியல் இயக்கத்தில் இணைந்து கொண்டதாக அவர் கூறினார்.
கடந்த 36 ஆண்டுகளில் தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் அரசியல் வாழ்விலும் கசப்பான அனுபவங்களை சந்திக்க நேர்ந்தது.
எனவே, ஜனாதிபதித் தேர்தலை வெற்றியுடன் முடிக்க தீர்மானித்துள்ளதாக தம்புத்தேகம மத்திய மகா வித்தியாலய ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் முன்னிலையில் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 26ஆம் திகதி வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.