தேர்தல் பிரச்சாரங்களுக்கு சிறுவர்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்
தேர்தல் பிரசாரங்களில் சிறுவர்களை ஈடுபடுத்தக் கூடாது என சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் எனப்படும் கபே அமைப்பின் பணிப்பாளர் சுரங்கி ஆரியவன்ச வலியுறுத்தியுள்ளார்.
அந்த அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகளின்படி, சட்டவிரோத விளம்பர நடவடிக்கைகள் தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
சமூக வலைதளங்களிலும் பொய் பிரசாரம் அதிகரித்து வருகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் வேட்பாளரின் பிரசார நடவடிக்கைகளுக்காக பாடசாலை சிறுவர்களை பயன்படுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இது முற்றிலும் சட்டவிரோதமான செயல் என்று கஃபே அமைப்பு வலியுறுத்துகிறது. 18 வயது பூர்த்தியானவர்களுக்கே இந்த நாட்டில் வாக்களிக்கும் வாய்ப்பு உள்ளது.
எனவே பாடசாலை செல்லும் வயதுடைய பிள்ளைகளை இவ்வாறான அரசியல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்துவதை தடுப்பது பெற்றோரின் பொறுப்பு எனவும் கபே அமைப்பின் பணிப்பாளர் சுரங்கி ஆரியவன்ச குறிப்பிட்டுள்ளார்.