தேர்தல் முறைமையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான பரிந்துரைகளுக்கு அமைய செயற்பட எதிர்பார்ப்பு
தேர்தல் முறைமையை டிஜிட்டல் மயமாக்குவதற்காக முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைய செயற்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் டிஜிட்டல் தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். தகவல் தொழில்நுட்ப நிபுணர்களுடனான சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.