நாடாளுமன்றத் தேர்தல் 2024 : எவ்வளவு வீதம் வாக்குப் பதிவானது?
இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்று 14 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணி முதல் பி.ப 4 மணிவரை நடைபெற்றது.
நாடளாவிய ரீதியில் அமைதியான வாக்குப் பதிவுகள் இடபெற்ற நிலையில், சில இடங்களில் வன்முறைச் சம்பவங்களும் பதிவாகியிருந்தன.
கொழும்பில் 65 சதவீத வாக்குப் பதிவும், நுவரெலியாவில் 68 சதவீத வாக்குப் பதிவும் புத்தளத்தில் 56 சதவீத வாக்குப் பதிவும் மாத்தறையில் 64 சதவீத வாக்குப் பதிவும் பதுளையில் 67 சதவீத வாக்குப் பதிவும் மட்டக்களப்பில் 61 சத வீத வாக்குப் பதிவும் இடம்பெற்றுள்ளன.
அநுராதபுரத்தில் 65 சத வீத வாக்குப் பதிவும் குருணாகலில் 64 சதவீத வாக்குப் பதிவும் இரத்தினபுரியில் 65 சத வீத வாக்குப் பதிவும் கேகாலையில் 64 சத வாக்குப் பதிவும் பொலன்னறுவையில் 65 சதவீத வாக்குப் பதிவும் வன்னியில் 65 சதவீத வாக்குப் பதிவும் ஹம்பாந்தோட்டையில் 60 சதவீத வாக்குப் பதிவும் காலியில் 64 சதவீத வாக்குப் பதிவும் திருகோணலையில் 67 சதவீத வாக்குப் பதிவும் மொனராகலையில் 61 சதவீத வாக்குப் பதிவும் இடம்பெற்றுள்ளது.
என்றாலும், கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 75 வீதமான வாக்களிப்பு பதிவானதுடன், இம்முறை அதனையுடம் மிகவும் குறைவாகவே மொத்த வாக்குப் பதிவு இருக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்களில் அறிய முடிகிறது.