நாடு போதைப்பொருள் பிடியிலிருந்து விடுபடும் – அநுரகுமார
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் நாடு போதைப்பொருளில் இருந்து விடுபடும் என ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக நாட்டின் பொது மக்கள் தமது தேர்தல் பிரசாரத்தை தற்போதைக்கு கையில் எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதுவரை ஒருவரையொருவர் எதிர்த்துதான் அரசாங்கம் அமைக்கப்பட்டது. வடக்கு கிழக்கில் தேச விரோத அரசாங்கங்கள் தோன்றின.
மத கோசங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன. நாட்டில் தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்புவதற்கான வரலாற்று வாய்ப்புகளை நாட்டின் ஆட்சியாளர்கள் கைவிட்டதாகவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.