நாட்டின் அபிவிருத்தியை கிராமிய மட்டத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.
நாட்டின் அபிவிருத்தியை கொழும்பில் இருந்து அன்றி கிராமத்தில் இருந்தே ஆரம்பிக்க வேண்டுமென்று மல்வத்து பீடத்தின் மஹாநாயக்கர் சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய தவிசாளர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரைச் சந்தித்த பின்னர் அவர் இது பற்றி கருத்து வெளியிட்டார்.
நாட்டின் அபிவிருத்திக்காக அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டுமென மஹாசங்கத்தினர் அனுசாசனம் வழங்கினாலும் அதனை எவரும் பின்பற்றுவதில்லை என்றும் மஹாநாயக்க தேரர் சுட்டிக்காட்டினார்.