விவசாய அமைச்சும் விவசாயத் திணைக்களமும் இணைந்து இலங்கையில் நெற்பயிர்ச் செய்கையை ஊக்குவிக்கும் வகையில் பத்தாண்டு திட்டமொன்றை ஆரம்பிக்கின்றன. அதன்படி, அடுத்த மூன்றாண்டுகளுக்குள், ஒரு ஹெக்டேர் அரிசி விளைச்சலை 4.5 மெட்ரிக் தொன்னாகவும் 5 ஆண்டுகளில் 5.2 மெட்ரிக் தொன்னாகவும், 10 ஆண்டுகளில் 5.5 மெட்ரிக் தொன்னாகவும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த போகத்தில் ஹெக்டேர் ஒன்றின் நெல் விளைச்சல் 3.1 மெற்றிக் தொன்னாக இருக்கும் என திணைக்களம் எதிர்பார்த்துள்ளது.
2021 போகத்திற்கு முன்னர், இலங்கையில் ஒரு ஹெக்டேர் விளைச்சல் 4.1 மெட்ரிக் தொன் விளைச்சல் கிடைக்;கப்பெற்றது.
புதிய நெற்செய்கை முறைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலமும், பரசூட் முறையை நடைமுறைப்படுத்துவதன் மூலமும், உயர்தர விதைகளுடன் இரசாயன உரங்களை வழங்குவதன் மூலமும் அரிசி விளைச்சல் அதிகரிக்க முடியும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.