நாட்டிற்கு தேசிய வரிக் கொள்கை – நாமல் ராஜபக்ஷ
நாட்டில் தேசிய வரிக் கொள்கையை அறிமுகம் செய்யப் போவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நியாயமான, எளிமையான வரிக் கொள்கையை அறிமுகம் செய்வது தமது நோக்கம் என திரு.நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
நேற்று கொழும்பு – கொட்டிகாவத்தையில் இடம்பெற்ற மக்கள் கூட்டமொன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஆட்சி மாறுகையில் அரசியல்வாதிகள் மாற முடியாத தேசிய வரிக் கொள்கை நாட்டிற்கு அவசியம் என அவர் குறிப்பிட்டார்.