நாட்டில் 33 ஆயிரத்திற்கும் அதிகமான புற்று நோயாளர்கள்.
இலங்கையில் வாய்ப் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய்கள் பதிவாகும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தில் மட்டும் 33 ஆயிரத்திற்கும் அதிகமான புற்று நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் பாலித மஹிபால சுட்டிக்காட்டியுள்ளார்.
புற்றுநோயால் கடந்த வருடம் 19 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கர்ப்பப்பை, நுரையீரல், பெருங்குடல் மற்றும் மார்பக புற்றுநோய் ஆகியவை இந்த நாட்டில் புற்றுநோய் இறப்புகளுக்கு முக்கிய காரணங்களாகும் என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.