இந்திய தமிழர்கள் என்ற இன் அடையாளத்தை ஆவண ரீதியாக மாற்றி அமைக்கும் வகையில் பதிவாளர் நாயகம் விடுத்துள்ள சுற்றறிக்கைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் “நாம் எந்த இனத்தை சேர்ந்தவர் என்பதை தீர்மானிக்க பதிவாளர் நாயகம் யார் ??? என கேள்வி எழுப்பியுள்ளார்.
“50 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் குடியுரிமை பறிக்கப்பட்ட போது எங்களிடம் இருந்த ஒரே அடையாளம் இந்திய வம்சாவளி தமிழ் மட்டுமே. இலங்கை குடிமக்களாகிய எமக்கு எமது இன அடையாளத்தைப் பாதுகாப்பதற்கான உச்சக்கட்ட உரிமை உள்ளது. நமது இன அடையாளத்தை அழிப்பதில் பதிவாளர் நாயகம் தலையிடுவது, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் உச்ச சட்டத்தால் உறுதிசெய்யப்பட்ட இனத்தைப் பாதுகாப்பதற்கான அடிப்படை உரிமைகளை மீறுவதாகும். எமது மக்களின் இன அடையாளத்தைப் பாதுகாக்கவும் நீதியை உறுதிப்படுத்தவும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தொடர்ந்து முன்நிற்கும்” என செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்
இது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் பதிவாளர் நாயகத்திற்கு அனுப்பிய கடிதமும் பதிவாளர் நாயகம் விடுத்துள்ள சுற்றறிக்கையும் வருமாறு