‘இலங்கையின் கடனை எவ்வாறு செலுத்துவது என அண்மையில் ஒருவரிடம் கேட்ட போது’அவர்களுடன் நட்பு ரீதியாக பேசி இதனை தீர்க்கலாம்’ என கூறினார். ஆனால், அவ்வாறு செய்தால் ஒரு நேரடி அன்னிய முதலீடோ, ஒரு ரூபாய் கூட நாட்டுக்கு வராது.
நாம் ஏமாற்றப்பட்டது போதும். நாம் 365 நாட்களும் ஏமாற்றப்பட்டதாலயே நாடு இவ்வாறு வங்குரோத்து நிலைக்குச் சென்றுள்ளது.
தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டால் நாடு மேலும் வங்குரோத்து நிலைக்கே தள்ளப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மக்களுக்காக சரியாகச் சிந்தித்து, நீதிக்காக அச்சமின்றி செயற்பட வேண்டும். நாடு எதிர்நோக்கியுள்ள பாரிய பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும்.
தற்போதைய ஆட்சியாளர்கள் செல்வந்தர்களை காப்பாற்றி விட்டு, வங்குரோத்து நிலையில் சுமைகளை மக்கள் மீது சுமத்தி வருகின்றனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
திறந்த பொருளாதாரத்தினால் வளர்ச்சியடைந்த ஒவ்வொருவருக்கும் துன்பப்படுவோருக்கு தமது நிதியில் ஒரு பகுதியை வழங்கும் பொறுப்புள்ளது.
கஷ்டப்படும் மக்களை அதிலிருந்து மீட்பதற்கான வேலைத்திட்டத்தை நாம் முன்வைப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 78 ஆவது கட்டமாக, யக்கலமுல்ல பொல்பாகொட தர்மபால மகா வித்தியாலயத்திற்கு 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.