நிலையான எதிர்காலத்தை நோக்கி மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
நிலையான எதிர்காலத்தை நோக்கி செல்வதா? இல்லையா? என்பது பற்றி மக்கள் தீர்மானிக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னோக்கிச் செல்வதற்கான வழியை காண்பித்துள்ளதாகவும் அவர் கூறினார். அந்த வழியில் நாட்டை முன்னோக்கி கொண்டு சென்று வெற்றியடைவதற்கு தனக்கு ஆணை வழங்குமாறு ஜனாதிபதி மக்களிடம் கேட்டுக் கொண்டார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மீறி செயற்படும் பட்சத்தில் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் சீர்குலையுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
கேகாலை நகரில் நேற்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது அவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.
மக்களின் எதிர்காலத்திற்காக சந்தர்ப்பமொன்றைக் கோரும் அரசியல்வாதிகளுக்கு, வாய்ப்பு வழங்கும் நேரம் இதுவல்ல என்றும் அவர் கூறினார்.
நெருக்கடிக்கு மத்தியில் பாதுகாக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். இதற்காக தானும் தனது குழுவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.