நீர்க் கட்டணக் குறைப்பிற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நீர்க் கட்டணம் திருத்தப்படவுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வீட்டு நீர்க் கட்டணம் ஏழு சதவீதம் குறைக்கப்படும்.
வைத்தியசாலைகளுக்கு 4.5 சதவீதத்தாலும், சமய ஸ்தானங்களுக்கு 6.3 சதவீதத்தாலும் நீர் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
விலைச் சூத்திரத்தின் அடிப்படையில், இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுவாக நீர் கட்டணத்தை 5.94 சதவீதமாக குறைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.