பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கத்தின் சிரேஷ்ட ஆலோசகராக முஹமது யூனூஸ்
பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கத்தின் சிரேஷ்ட ஆலோசகராக பொருளாதார நிபுணர் முஹமது யூனூஸ் நியமிக்கப்படவுள்ளார்.
பங்களாதேஷ் ஜனாதிபதிக்கும் இராணுவத் தலைவர்களுக்கும் மாணவத் தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
பொருளாதாரத் துறைக்காக 2006ஆம் ஆண்டில் நொபெல் பரிசை வென்ற முஹமது யூனூஸ் இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது.
மாணவர்களின் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களினால் முன்னாள் பிரதமர் ஷேய்க் ஹசீனா நேற்று முன்தினம் தனது பதவியை இராஜினாமாச் செய்தார்.
அவர் இந்தியாவின் தலைநகர் புதுடில்லிக்கு தப்பிச் சென்றிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
பங்களாதேஸின் தேசபிதா என்றழைக்கப்படும் ஷேய்க் முஜிபுர் ரஹ்மானின் மகளான ஷேய்க் ஹசீனா கடந்த 30 வருட வரலாற்றில் இருபது வருடங்களாக பங்களாதேஷில் ஆட்சி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.