பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேய்க் ஹசீனாவை நாடு திரும்புமாறு கோரிக்கை
வெளிநாட்டு கையிருப்பு வேகமாக குறைந்து வரும் பங்களாதேசில் உள்ள 219 ஆடைத் தொழிற்சாலைகள் தற்போது மூடப்பட்டுள்ளன.
சம்பள உயர்வு கோரி பல தொழிலாளர் வேலைநிறுத்தப் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர். தற்போதுள்ள பல வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், நாட்டில் பெரும் வேலைவாய்ப்பின்மை ஏற்பட்டுள்ளது.
நகர்ப்புறங்களில் சுமார் 7 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டாலும், கிராமப் புறங்களில் 17 முதல் 19 மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.
எனவே, எதிர்வரும் காலங்களில் நாடு கடுமையான சூழலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு திரும்பக் கோரி போராட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன.
இதற்கிடையில், பங்களாதேஷில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் அமைதியின்மை காரணமாக சர்வதேச ஆடை வாங்குவோர் தங்கள் விநியோகத்திற்காக இந்தியா பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர்.
இந்த நிலையில் வெளியாட்களின் தூண்டுதலால் இந்தப் பணிப்புறக்கணிப்பு நடத்தப்படுவதாக அந்நாட்டு ஆடை நிறுவன உரிமையாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
அந்த நிலையை தவிர்க்க இடைக்கால அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காதது, தமக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போதைய நிலையில், 5 பில்லியன் பெறுமதியான விநியோகங்களை இந்தியா பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், பங்களாதேஸ_க்கு 202 மில்லியன் டொலர்களை உதவியாக வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது. இந்த நிதி; நாட்டின் பொருளாதார அபிவிருத்தி, நிறுவன உருவாக்கம் மற்றும் மேம்பாட்டிற்காக வழங்கப்படுகிறது.
அந்தநாட்டின் இடைக்கால அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், அண்மையில் அமெரிக்கக் குழுவொன்று அந்நாட்டுக்கு விஜயம் செய்தது.
இதற்கிடையில் பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறி வருகின்றனர்.
பாகிஸ்தான் அரசாங்கம் தனது மூலோபாய திட்டமிடல் மற்றும் பொருளாதார முதலீட்டுக்கான எந்த திட்டத்தையும் செயல்படுத்தாததே இதற்குக் காரணம்.
இந்தநிலையில், பாகிஸ்தானிலும் மின்சார நெருக்கடி அதிகரித்துள்ளது. தடையற்ற மின்சாரம் இல்லாததால் ஜம்மு காஷ்மீர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.