பத்து லட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவது இலக்கு
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ், சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிலாளர்களை பாதுகாத்து பத்து லட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவது இலக்காகும் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
கேகாலை நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதுபற்றி கருத்து வெளியிட்டார். அரசாங்கம் தொழில் முயற்சியாளர்கள் மீது பாரிய அளவிலான வரியை சுமத்தியுள்ளது.
இதனால். சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளார்கள். குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த குடும்பத் தலைவிகளுக்கு 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படவிருக்கிறது.
பயிர்ச் செய்கைக்கு பயன்படுத்தப்படாத காணிகளை தொழில் அற்ற இளைஞர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. தோட்டத் தொழிலாளர்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவது இலக்காகும் என்று சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்தார்.