பல்கலைக்கழக நுழைவிற்கான வெட்டுப்புள்ளி அடுத்த மாதம் வெளியீடு.
பல்கலைக்கழக நுழைவிற்கான வெட்டுப்புள்ளி தயாரிக்கும் பணியை விரைவுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
87 ஆயிரம் மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழக நுழைவிற்கு விண்ணப்பித்துள்ளனர். ஊழியர் பற்றாக்குறை காரணமாக வெட்டுப்புள்ளி வெளியிடுவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது.
இதற்குத் தீர்வாக பல்கலைக்கழகங்களில் இருந்து அதிகாரிகளை நியமிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.