பிரான்ஸில் நடத்தப்படவிருந்த தாக்குதல்கள் முறியடிப்பு
இவ்வாண்டு பாரிஸ் நகரில் நடத்தப்பட்ட ஒலிம்பிக், பராலிம்பிக் போட்டிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதற்காக தீட்டப்பட்ட மூன்;று சதிகளை முறியடித்துள்ளதாக பிரான்சின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
கடந்த ஜூலை 26ஆம் திகதிக்கும், ஆகஸ்ட் 11ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சதிமுயற்சிகள் இடம்பெற்றிருந்தன.
இவற்றில் இஸ்ரேலிய நிறுவனம் அல்லது இஸ்ரேலியர்களைத் தாக்கும் முயற்சியும் உள்ளடங்குமென பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான அரச வழக்குரைஞர் தெரிவித்தார்.
சதிமுயற்சிகள் தொடர்பில் சிறுவனோ, சிறுமியோ அடங்கலாக ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.