எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி யாழ்ப்பாண மாவட்டத்தின் சில உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடவுள்ளது என அந்தக் கட்சியின் செயலாளர் ஊடகங்களிடம் அறிவித்துள்ளார்.
அந்தக் கட்சியின் சார்பில் வேட்புமனுத் தாக்கல் அல்லது கட்டுப்பணம் செலுத்துவதற்காக பிள்ளையான் யாழ்ப்பாணத்துக்கு வருவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனது கட்சியும் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கிலுள்ள சில சபைகளில் போட்டியிடவுள்ளது எனத் தெரியவருகின்றது.
N.S