புதிய அரசாங்கம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வென்றிருக்கிறது.
புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்று, குறுகிய காலப்பகுதியில் முதலீட்டாளர்களுக்கு மத்தியில் நம்பகத்தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
மிகவும் குறுகிய காலப்பகுதியில் அரசாங்கம் எடுத்தத் தீர்மானங்களினால், உள்நாட்டு – வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மத்தியிலும், சந்தைகளிலும் நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டிருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் அறிவித்தார்கள் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாட்டின் சுபீட்சத்திற்கு இது வழிவகுக்கும். சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தொழில்நுட்ப விடயங்கள் பற்றி நேற்றைய கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தினார்கள்.
பொதுமக்களுக்கு ஏற்படும் தாக்கங்களை குறைக்கும் வகையில் செயற்படுவது பற்றி இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாகவும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மேலும் தெரிவித்தார்.