புதிய அரசியல் முறையொன்றை உருவாக்குவது அவசியம் – திலித் ஜயவீர
புதிய அரசியல் முறையொன்றை உருவாக்குவதற்கு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது இன்றியமையாதது என ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களுக்கு அரசியல் அறிவு குறைந்தளவில் காணப்படுவதாக சில அரசியல்வாதிகள் தெரிவிக்கின்றனர். நாட்டின் இளைஞர் சமுதாயம் மாற்றத்தை விரும்புகிறது.
எனவே, இம்முறை ஜனாதிபதித் தேர்தல் இளைஞர் சமுதாயத்தினருக்காக நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் விவாதத்தில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.
மார்ச் 12 அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் நான்கு வேட்பாளர்கள் பங்குபற்றவிருந்த நிலையில், திலித் ஜயவீர மாத்திரமே கலந்துகொண்டிருந்தார்.
அதன்போது உரையாற்றிய அவர், பல்வேறு கட்சிகளின் கொள்கை அறிக்கைகள் இருந்தாலும், விவேகத்துடன் வாக்களிக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கு உள்ளதாக தெரிவித்தார்.