இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிர் கோபால் பக்லே விரைவில் தமது சேவைக்காலத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பவுள்ளதாகவும் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகரை நியமிக்கும் ஆலோசனைகளில் இந்தியா ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன், கோபால் பக்லேவை மீள நாட்டுக்கு அழைக்க இந்தியா ஆலோசித்துள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இந்தியத் தூதர் சந்தோஷ் ஜாவை இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிசம்பர் மாதத்துடன், அஸ்திரேலியாவுக்கான இந்தியத் உயர்ஸ்தானிகரின் சேவைக்காலம் நிறைவுக்கு வரவுள்ளது. அவுஸ்ரேலியாவுக்கான புதிய உயர்ஸ்தானிகராக கோபால் பக்லேவை நியமிக்க இந்தியா உத்தேசித்துள்ளது.
அவுஸ்ரேலியாவுடன் இந்தியா நெருங்கிய உறவைக் கொண்டிருப்பதால், கோபால் பக்லேவின் நியமனம் மேலும் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் என இந்தியா கருதுகிறது.
இந்தியா-ஐரோப்பிய யூனியனின் விவகாரங்களை கையாண்டதில் சிறப்பு நிபுணத்துவம் மிக்கவராக சந்தோஷ் ஜா, திகழ்வதால் இலங்கையில் இந்திய மற்றும் சீன விவகாரங்களை சிறப்பாக கையாள்வார் என கருதப்படுகிறது.