புதிய ஜனாதிபதிக்கு சர்வதேச நாடுகள் வாழ்த்து.
இலங்கையின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அனுர குமார திசாநாயக்காவிற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்கள்.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த புதிய ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவதற்குத் தயார் என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசு கொஷி ஹிடேக்கி தெரிவித்துள்ளார்.
தமது தலைவரைத் தெரிவு செய்வதற்காக இலங்கை மக்கள் வழங்கிய பங்களிப்பிற்கும் அவர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புதிய ஜனாதிபதியை சந்தித்து, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தொஸ் ஜா வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் தினேஷ் குணவர்த்தனவும் ஜனாதிபதிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்காவிற்கு அமெரிக்கா வாழ்த்துத் தெரிவித்துள்ளது.
நீதியானதும் நியாயமானதுமான தேர்தலுடன் தொடர்புபட்ட மக்களுக்கு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலிசாங் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.