புதிய ஜனாதிபதி வந்ததன் பின்னர் நாட்டின் முன்னேற்றத்திற்கு பல நடவடிக்கைகள்.
செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க 57 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டினார்.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி பதவியேற்பு நிகழ்வு குறைந்த பட்ச செலவில் நடைபெற்றது.
நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டில் சிறந்ததொரு அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்தார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் வெற்றிக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
பாராளுமன்றம் கலைப்பு தொடர்பான வர்த்தமானியில் ஜனாதிபதி கடந்த மாதம் 24ஆம் திகதி இரவு கையொப்பமிட்டுள்ளார்.
ஜனாதிபதி உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட ஒரு அமைச்சருக்கு பல அமைச்சுக்கள் பிரிக்கப்படும் வகையில், கடந்த மாதம் 24ஆம் திகதி அமைச்சரவையை நியமித்து அரசியல் கலாசாரத்தில் மாற்றங்களை ஏற்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார்.
கடந்த மாதம் 25ஆம் திகதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, மக்களின் ஜனநாயக உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக உறுதியளித்தார்.
மக்கள் இறைமையில் தமக்கு மிகுந்த நம்பிக்கை இருப்பதாக ஜனாதிபதி வலியுறுத்தினார். தனது செயற்பாடுகளின் மூலம் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க எதிர்பார்ப்பதாகவும், பொருத்தமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளத் தயார் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இதேவேளை, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன் இணைந்து செயற்படத் தயார் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
நீட்டிக்கப்பட்ட கடன் திட்டத்தின் மூன்றாவது மீள்பரிசீலனை காலம் குறித்து புதிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.