புத்திஜீவிகளை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்ய கூடிய வல்லமை தமக்கு உண்டு – ஜனாதிபதி
சமுதாயம் எதிர்பார்க்கின்ற பண்புகளை புத்திஜீவிகளை கொண்ட பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்ய கூடிய வல்லமை தமக்கு உண்டென்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
சட்டத்தை மதிக்கின்ற குழுவாக இருப்பது அவசியம். சுத்தமான பாராளுமன்றத்தை உருவாக்குவது தொடர்பில் மக்கள் தேசிய மக்கள் சக்தி மீது கூடுதலாக நம்பிக்கை கொண்டுள்ளனர்.
இந்த நாட்டில் முதற்தடவையாக வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய அரசியல்வாதிகள் அரசியலில் ஓய்வு பெற்றுள்ளனர்.
இது இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் முக்கிய பரிணாம வளர்ச்சியாகும். எதிர்வரும் பொதுத் தேர்தலில் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு மிகக் கூடுதலான ஆதரவை வழங்கி அதிகூடிய பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொடுப்பர் என்று ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.
பாராளுமன்றத்திற்கு இம்முறை பல புதிய முகங்கள் உள்வாங்கப்படும். சிறந்த திறமையானவர்களை கொண்ட தமது அணியில் இருந்து புதிய முகங்கள் பாராளுமன்றத்திற்கு வருகை தருவர் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இங்கு உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் வைத்தியர் நிஹால் அபேயசிங்க கருத்து வெளியிடும் போது, எதிர்வரும் தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு தமது கட்சி தயார் என்று குறிப்பிட்டார்.