பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று முதல் பொறுப்பேற்பு.
பாராளுமன்றத் தேர்தலுக்காக இன்று முதல் வேட்புமனுக்கள் பொறுப்பேற்கப்படும். 22 தேர்தல் மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட செயலகங்களில் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் வேட்புமனுக்களை பொறுப்பேற்பார்கள்.
எதிர்வரும் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்கள் பொறுப்பேற்கப்படும். இதேவேளை, தேர்தலில் போட்டியிடுவதற்காக எதிர்வரும் 11ஆம் திகதி நண்பகல் வரை கட்டுப்பணம் செலுத்த முடியும்.
37 சுயேட்சைக்குழுக்கள் தற்போதைக்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், திகாமடுல்ல, கொழும்பு ஆகிய தேர்தல் மாவட்டங்களிலேயே அதிகளவான குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.
தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பிற்காக தற்போது விண்ணப்பங்கள் பொறுப்பேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நண்பகல் வiர் பொறுப்பேற்கப்படும்.