பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான திறன் புதிய ஜனாதிபதிக்கு உள்ளது
சீனா சகல சந்தர்ப்பங்களிலும் இலங்கையின் நம்பிக்கைக்குரிய நட்பு நாடென இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷி சென் ஹோங் தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்கள் வெற்றிகரமான முறையில் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொண்டதாக அவர் கூறினார். சீனா ஏனைய நட்பு நாடுகளின் பங்களிப்புடன் தற்போதைய ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் கூறினார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டு தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான திறன் புதிய ஜனாதிபதிக்கு இருப்பதாகவும் தூதுவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைக் கூறினார். இந்த நிகழ்வில் அமைச்சர் விஜித்த ஹேரத்தும் உரையாற்றினார்.
பொருளாதார நெருக்கடி நிலவிய காலப்பகுதியில் சீனா இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் கூறினார்.
கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு சீன நிதி நிறுவனங்கள் வழங்கும் பங்களிப்புகளுக்கும் அமைச்சர் நன்றி தெரிவித்தார்.
இலங்கைக்கு எதிர்காலத்தில் ஏராளமான சீன சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.