பொருளாதாரத்தை சீர் செய்ய இன்னும் சில வருடங்கள் தேவை.
நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக சீர்செய்வதற்கு இன்னும் சில வருடங்கள் தேவை என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பொறுப்பை ஏற்காத அரசியல்வாதிகளை நிராகரிக்க வேண்டுமென்றும் அவர் கூறினார்.
அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் மாநாடு இன்று கொழும்பில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற போதே ஜனாதிபதி இந்த விடயத்தைத் தெரிவித்தார்.
மக்களின் வாழ்க்கைச் சுமையினை அடுத்த வருடத்தில் இலகுபடுத்தி, 2026ம் ஆண்டில் நாட்டை விரைவான அபிவிருத்தியின்பால் கொண்டு செல்லும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்திருப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.