பொருளாதாரத்தை ஸ்திரமாக முன்னெடுத்துச் செல்ல மக்களின் ஆணை தேவை
2022 ஆம் ஆண்டு நாடு வீழ்ச்சியடைந்த போது நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திய நிலையில், அதனை தொடர்ந்தும் கட்டியெழுப்ப மக்களின் ஆணையை கோருவதாக ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு தற்போது தேவை மாற்றம் அல்ல, நடைமுறை வேலைத்திட்டம். அடுத்த ஐந்தாண்டுகளில் நாட்டில் பொருளாதார புரட்சியை ஏற்படுத்தி புதிய பொருளாதாரத்தை உருவாக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியம் அங்கீகரிக்கப்பட்ட உடன்படிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கண்டியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
தாம் ராஜினாமா செய்யும் அல்லது ஓடிப்போகும் நபர் அல்ல என்றும் திரு.விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் க்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை தம்முடன் இணைந்து போட்டியிடாமைக்கு பாடம் கற்பிக்குமாறு மக்களிடம் கேட்டுக் கொள்வதாகவும் ஜனாதிபதி அறிவித்தார்.
ஜனதா விமுக்தி பெரமுனவின் பயங்கரவாதத்தால் அழிவடைந்த நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்கும் பணியில் ஐக்கிய தேசிய கட்சி முன்னெடுத்த செயற்பாடுகளை ஜனாதிபதி இங்கு நினைவுகூர்ந்தார்.