போதைப்பொருள் கடத்தல்இ சிறுவர், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் புதிய சட்டங்கள் நாமல் ராஜபக்ஷ
போதைப்பொருள் கடத்தல், சிறுவர், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கு, தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லை என்றால், புதிய சட்டங்களை கொண்டுவர தாம் தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தெமட்டகொடையில் நேற்று இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் குறிபிட்டார்.
பிளவுபட்ட சமூகம் நிச்சயமாக மீளக் கட்டியெழுப்பப்படும் எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அதற்கான திறன் தன்னிடம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.