போர் நிறுத்தம் குறித்து கட்டார் – அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை.
கட்டார் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான ஷேக் மொஹம்மட் பின் அப்துல் ரஹ்மான் பின் ஜஸிம் அல் தானி (Sheikh Mohammed bin Abdulrahman bin Jassim Al Thani),
அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் அன்டனி பிளிங்கனுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்போது காஸாவில் போர் நிறுத்தத்திற்கான கூட்டுத் தலையீடு மற்றும் முறைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
லெபனானில் அதிகரித்துவரும் மோதலை கட்டுப்படுத்துவது குறித்தும் அவர்கள் உரையாடியுள்ளனர். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை எகிப்து வெளிவிவகார அமைச்சர் ஈரான் வெளிவிவகார அமைச்சரை கெய்ரோவில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
லெபனான், காஸா எல்லைப்பகுதி, செங்கடல் ஆகிய பிரதேசங்களில் தற்போதைய இராணுவ நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.