போர் நிறுத்த அழைப்புகளை மீறி இஸ்ரேல் – லெபனான் மோதல்.
சர்வதேச நாடுகளின் 21 நாள் போர் நிறுத்தத்திற்கான அழைப்பையும் மீறி, லெபனானும் இஸ்ரேலும் தொடர்ந்து போரை நடத்தி வருகின்றன.
வடக்கு இஸ்ரேலில் லெபனான் எல்லைப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள ஹசீனா நகருக்கு ஹிஸ்புல்லா ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
இந்த சம்பவத்தில் ஏவுகணை எதிர்ப்பு கட்டமைப்பு அழிவடைந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தியாலத்தில் தெற்கு லெபனானுக்கும், வடக்கு இஸ்ரேலுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் 2000க்கும் மேற்பட்ட ரொக்கெட்டு மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் பரிமாறப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.