மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இன்று
மகளிர் ரி-20 உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரின் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி 31 ஓட்டங்களினால் வெற்றியீட்டியுள்ளது.
இந்தப் போட்டி சார்ஜாவில் நேற்று நடைபெற்றது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இதில் மோதிக்கொண்டன. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி 116 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
117 என்ற ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 9 விக்கட் இழப்பிற்கு 85 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவிக்கொண்டது.
இதேவேளை, மகளிர் ரி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.
தென்னாபிரிக்க மற்றும் மேற்கிந்தியதீவுகள் மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டி டுபாயில் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30ற்கு ஆரம்பமாகவுள்ளது.
அடுத்த போட்டியில் இந்திய மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இரவு 7.30ற்கு ஆரம்பமாகும்.