மகளிர் 100 மீற்றர் ஓட்டப் போட்டி: செயின்ட் லூசியா நாட்டிற்கு முதலாவது ஒலிம்பிக் பதக்கம்.
பாரிஸ் ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் ஆகக்கூடுதலான தங்கப் பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது.
சீனா 16-தங்கம், 12-வெள்ளி, 9-வெண்கலம் அடங்கலாக 37 பதக்கங்களை வென்றிருக்கிறது.
அமெரிக்கா 14-தங்கம், 24-வெள்ளி, 23-வெண்கலம் அடங்கலாக 61 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
பிரான்ஸ் 12-தங்கம், 15-வெள்ளி, 41-வெண்கலம் அடங்கலாக 41 பதக்கங்களுடன் 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
2024 பாரிஸ் ஒலிம்பிக்கின் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் செயின்ட் லூசியாஸைச் சேர்ந்த ஜூலியன் அல்பிரட் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
இந்நாட்டின் சார்பில் முதலாவது ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் வீராங்கனை என்ற பெருமை, ஜூலியன் அல்பிரட்டிற்கு கிடைக்கிறது.
இவர் குறித்த தூரத்தை 10 தசம் ஏழு-இரண்டு செக்கன்களில் ஓடிக் கடந்தார். இந்தப் போட்டியில் பிரிட்டனுக்கு வெள்ளிப் பதக்கமும், அமெரிக்காவிற்கு வெண்கலப் பதக்கமும் கிடைத்தன.