உள்ளுராட்சிமன்ற தேர்தல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் பாராளுமன்றில் இன்று ஆரம்பமானது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு நாட்டிற்கு விரைவில் கிடைக்கும் என்று ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய விவாதத்தின்போது தெரிவித்தார்.
உள்ளுராட்சிமன்ற பிரதிநிதித்துவம் ஜனநாயகத்தின் முக்கிய அங்கமாக இருப்பதனால,; உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்த வேண்டும்; என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதன்போது கூறினார். ஜனநாயகத்தின் அடிப்படை விடயம் தற்போது சீர்குலைக்கப்பட்டுள்ளது. மக்களின் வாக்குரிமையினை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக்கொண்டார்.
நாட்டின் தற்போதைய நிலையினை புரிந்துகொண்டு மக்கள் அர்ப்பணிப்புகளை மேற்கொள்ளுமாறு குறிப்பிடுகின்றபோதும், அரசாங்கமும் அர்ப்பணிப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் உரிய வகையில் முன்னெடுக்கப்படுகிறதா என்பதுபற்றி அறிவதற்கு உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தேர்தல் முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு சகல கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று விவாதத்தில் பங்கேற்ற அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். சகல கட்சிகளும் அங்கம் வகிக்கும் வகையில் பாராளுமன்ற தெரிவு குழுவை நியமிக்க வேண்டும் எனறும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.