மக்களை ஏமாற்ற தாம் தயாரில்லை என ஜனாதிபதி தெரிவிப்பு
மக்களின் வாழ்க்கைச் சுமையை இலகுவாக்குவதே தனது முதல் நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகளைப் பாதுகாத்துக்கொண்டு செயற்படுவது அவசியமாகும்.
அந்த நிதியத்தின் மூலம் இலங்கை அடைந்துள்ள சாதனைகளை தொடர்ந்து பாதுகாப்பது முக்கியம் என சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜூலி கொசெக் (Julie Kozack) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
ஐ.எம்;.எப்பின் பங்களிப்பு காரணமாக இலங்கைக்கு 18 நாடுகளின் ஆதரவு கிடைத்தது. நிலுவையில் உள்ள கடன்களுக்கான வட்டி செலுத்துதலில் 10 பில்லியன் டொலர்களுக்கான நன்மையும் உள்ளது.
நேற்று பிற்பகல் ஹொரணை பொது விளையாட்டரங்கில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
சில வேட்பாளர்கள் எல்லாவற்றையும் இலவசமாகக் கொடுப்பதாகவும், வரிகளைக் குறைப்பதாகவும் கூறுகிறார்கள். ஆனால் அவ்வாறு செய்ய முடியாது.
வாக்குகளைப் பெறுவதற்காக தாம் மக்களை ஏமாற்றத் தயாரில்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் சாதாரண மக்களுக்கு முக்கியமானதாகும். எனவே, இறுதித் தீர்மானத்தை மக்கள் கவனமாக எடுக்க வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.