மக்கள் ஏழைகள், ஆட்சியாளர்கள் பணக்காரர் என்ற முறைமை மாற்றப்பட வேண்டும்
மக்கள் ஏழைகள், ஆட்சியாளர்கள் பணக்காரர் என்ற முறைமை உடனடியாக மாற்றப்பட வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
வெல்லவாய மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார். ஏழை நாட்டை வளமிக்க நாடாக மாற்ற தனது அரசின் கீழ் செயல்படப் போவதாக அவர் தெரிவித்தார்.
எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை தேசிய மக்கள் சக்தியிடம் ஒப்படைக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.