மக்கள் தாங்கிக்கொள்ளும் வரி முறைமை அறிமுகப்படுத்தப்படும் – நாமல்
தற்போதுள்ள பாரிய வரிக் கொள்கைக்குப் பதிலாக, மக்கள் தாங்கிக் கொள்ளக்கூடிய வரிக் கொள்கையை தனது அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தைப் போலவே கிராம மக்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். அந்த பொறுப்புகளை புரிந்து கொள்ளும் அரசியல் சக்தியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை குறிப்பிட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிறுத்திய இடத்திலிருந்து மீண்டும் அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். யக்கல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.