மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்
நாட்டின் ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு விடுக்கபட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் பாதுக்க, சீதாவக்க – காலி மாவட்டத்தில் நெலுவ, எல்பிட்டிய, நாகொட, பத்தேகம, வந்துரவ, தவளம – கம்பஹா மாவட்டத்தில் அத்தனகல்ல – களுத்துறை மாவட்டத்தில் மத்துகம, பாலிந்தநுவர, அகலவத்த, புளத்சிங்கள, தொடங்கொட, இங்கிரிய, வளல்லாவிற்ற, ஹொரணை – கேகாலை மாவட்டத்தில் வரகாபொல, தெஹியோவிற்ற, மாவனல்ல, றுவன்வெல்ல, புளத்கொஹ{பிட்டிய, தெரணியகல, அறநாயக்க, கேகாலை, யட்டியாந்தோட்டை, இரத்தினபுரி மாவட்டத்தில் கிரிஎல்ல, களவான, இரத்தினபுரி, அயகம, குருவிற்ற, எஹலியகொட, எலபாத்த ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த முன்னெச்சரிக்கை அறிவித்தல் இன்று மாலை 4.00 மணி வரை அமுலில் இருக்கும்.
அடைமழை, கடும் காற்று, கடல் கொந்தளிப்பு தொடர்பாக விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் இன்று காலை 8.00 மணி வரை அமுலில் இருக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக 41 ஆயிரத்து 500ற்கு மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 62 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
மொத்தமாக 64 தற்காலிக முகாம்களில் 2 ஆயிரத்து 100 குடும்பங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்து 200ற்கு மேற்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.