மத்திய ஐரோப்பிய நாடுகளில் வெள்ளப்பெருக்கால் பெரும் பாதிப்பு.
மத்திய ஐரோப்பாவின் பல பாகங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக பல பாதிப்புக்கள் நிகழ்ந்துள்ளன. இங்கு 16 பேர் பலியானதாக சர்வதேச ஊடகங்கள் அறிவித்துள்ளன.
செக் குடியரசு, ஒஸ்ரியா குடியரசு, போலந்து ஆகிய நாடுகளில் பாதிப்பு அதிகமாகும். போலந்தின் நைஸா நகரில் வாழும் மக்கள் உடனடியாக தாழ் நிலப்பிரதேசங்களிலிருந்து மேட்டு நிலப் பிரதேசங்களை நோக்கி நகர வேண்டுமென நகரபிதா உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இதன் பிரகாரம் 44 ஆயிரம் பேர் வரை இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிகிறது.