மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை
லெபனான் உட்பட மத்திய கிழக்கு நாடுகளில் தங்கிருக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
குறித்த நாடுகளின் தூதுக்குழுவினர் ஊடாக இலங்கையர்களுக்கான ஆலோசனை வழங்க்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நாடுகளில் தங்கிருப்பவர்கள் பற்றிய தகவல்களை அவர்களின் உறவினர்கள் கொன்சியுலர் பிரிவுகளைத் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள் 0112 338 812 அல்லது 0117 711 194 என்பதாகும்.