மத்திய கிழக்கில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட அறிவித்தல்
மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் விசேட அறிவித்தல் ஒன்று வெளிவிவகார அமைச்சினால் வெளியிட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக லெபானனில் போர் பதற்ற நிலைமை காணப்படுகின்றது.
பிராந்திய வலயத்தில் குறிப்பிடத்தக்களவு இலங்கையர்கள் பணிகளில் ஈடுபட்டு வருவதனை கருத்திற் கொண்டு அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக அந்தந்த நாடுகளில் காணப்படும் இலங்கைத் தூதரகங்களின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் அந்தந்த நாடுகளின் இலங்கைத் தூதரகங்கள் அடிக்கடி அறிவுறுத்தல்களை வழங்கி வருவதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, மத்திய கிழக்கில் வாழ்ந்து வரும் இலங்கையர்கள் இந்த அறிவுறுத்தல்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி அதன் அடிப்படையில் செயற்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஏதேனும் அவசர சந்தர்ப்பங்களில் மத்திய கிழக்கில் வாழும் இலங்கையர்களின் உறவினர்கள், வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவை பிரிவின் தொலைபேசி இலக்கங்களான 011 – 2338812ஃ 011 – 7711194 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.