மத வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை
மத வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாஸவின் அரசாங்கத்தின் கீழ், மத வழிபாட்டுத் தலங்கள் எதிர்நோக்கும் மின்சாரக் கட்டணப் பிரச்சினை தீர்க்கப்படும்.
கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மாநாடு மற்றும் பிக்கு ஆலோசனை பேரவையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் விஹாரை கட்டமைப்பைப் பாதுகாத்து, ஆன்மீகம் நிறைந்த தேசத்தை உருவாக்குவதே நோக்கமாகும் என சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.